உயில் சாசனம் மூலம் சொத்து பெறுவது எப்படி

உயில் ஒருத்தர் பெயரில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் அந்த சொத்து முழுமையாக வந்துவிடுமா, அந்த உயிலை பதிவு செய்து இருக்கவேண்டுமா, என்ற விஷயங்கள் பற்றி பார்க்கப்போகிறோம்.  உயில் என்று தமிழில் சொல்கிற விஷயம் ஆங்கிலத்தில் Deed of Will என்று சொல்கிறோம். அந்த பத்திரத்தை ஏன் will என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் என்றால், ஒரு அசையும் சொத்தோ அசையா   சொத்தோ அதாவது வீடு, நிலம், கட்டடம் இவைகள்   அசையா  சொத்து பணம், வங்கி இருப்பு, நகை, நிறுவனம் பங்குகள் இவை அசையும் சொத்து ஆகும். இந்த சொத்துக்களை  யார் வைத்திருக்குறார்களோ அவர் தான் காலத்திற்கு பிறகு அந்த சொத்துக்கள் யார்யாருக்கு போய் சேரவேண்டும் எப்படி அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்கிற விஷயத்தை எல்லாம் தன் காலத்திற்கு பிறகு எப்படி நடக்கவேண்டும் என்பதை எழுதி வைக்குற அந்த பத்திரத்திற்கு பெயர் தான் உயில் பத்திரம் என்று சொல்கிறோம். இந்த உயில் பத்திரம் ஒரு அப்பா தன காலத்திற்கு பிறகு வீடு தன் மகளுக்கும், வங்கி இருப்பு தன் மகனுக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார். அவர் இறந்த பிறகு அவர் மகன் வீட்டில் பங்கு கேட்டு பிரச்னை செய்யும்போது உயில் நகல் இருந்தால் அவர்  மகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அந்த சொத்து உயில் படி அப்பா எனக்கு தான் எழுதி வைத்திருக்கிறார் எனக்கு தான் முழுமையாக பாத்தியபடுது.

அப்படியென்று தீர்ப்பு கேட்க நிச்சயமாக வாய்ப்புள்ளது. அதேமாதிரி உயில் பத்திரம் மட்டுமே என்ன ஒரு சிறப்பம்சம் என்றால் அது பதிவு செய்யவேண்டுமென்று அவசியம் இல்லை. எந்த ஒரு நபரும் சாதாரணமாக வெள்ளைத்தாளில் அதை எழுதி இரண்டு நபர்கள் முன்னிலையில் சாட்சியாக வைத்து சாட்சியிடம் கையெழுத்து வாங்கி வைத்திருந்தால் அதுவே போதும். அதே போல் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் உயில் பொறுத்தவரைக்கும் ஒரு நபர் அந்த உயிலை பதிவு செய்திருந்தால் கூட உயிலை பதிவு செய்யவேண்டுமென்று கட்டாயம் இல்லைனாலும் ஒரு நபர் நான் எழுதிய உயிலை பதிவுப்பணிக்கலாம் என்று முடிவெடுத்து பதிவுசெய்திருந்தால் கூட அதன் பிறகு மனது மாறி சில காலம் கழித்து அதை ரத்து செய்து கையில் எழுதி எடுத்து வைத்திருந்தால் கூட கடைசியா என்ன எழுதியுள்ளாரோ அதுதான் செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கும் அதுதான் சட்டம். கடைசியாக ஒரு நபர் என்ன பத்திரம் எழுதி வைத்திருக்கிறாரோ அந்த உயில் பத்திரம் தான் செல்லும். அதில் என்ன யாருக்கு சொத்து போகுமென்று சொல்லிருக்கோ அவர்களுக்கு தான் அந்த சொத்து போகும் என்று நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கும். முதலில் எழுதி வைத்த உயில் பத்திரம் பதிவு செய்திருக்கு அதுதான் செல்லும் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். கடைசியாக எழுதி வைத்த உயில் பத்திரம் இறந்தவர் எண்ணப்படி அவருடைய உண்மையான கையெப்பம் அல்லது கைரேகை மூலமாக அது நிருபணம் செய்யப்பட்டால் நிச்சயமாக கடைசியாக எழுதிய உயில் மட்டுமே சட்டப்படி செல்லும். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் உயிலில் இருக்கிற சொத்துக்கள் குறித்து குடும்பத்தில் சொத்தை யார் அனுபவிக்கவேண்டுமென்ற பிரச்னை வந்தால் யார் சொத்தில் ஸ்வாதனத்தில்(possession) இருக்கிறார்கள், அந்த சொத்து கட்டிடமாக இருக்கும்பொழுது யாருடைய ஸ்வாதினத்தில் சொத்து இருக்கு என்பது மிக மிக முக்கியமான விஷயம். இப்போ ஒரு மகனுக்கு அந்த உயில் படி சொத்து சேரவேண்டும் என்று எழுதிவைக்கப் பட்டிருந்தால், மகள் அந்த சொத்தில் குடியிருந்தால் இல்லை அவங்க கண்ட்ரோலில் யாரையாவது வாடகைக்கு வைத்திருந்தால், அந்த சொத்தினுடைய ஸ்வாதினத்தை யார் உரிமைக் கூறுகிறார்களோ அவர்கள் வாங்கவேண்டுமென்றால் உயிலை மட்டுமே காண்பித்து நிச்சயமாக வாங்கமுடியாது. அதனால நேரடியாக நீதிமன்றத்துக்கு போய் அந்த உயிலில் படி இருக்கிற உரிமையே நிலைநாட்டிய பின் மட்டுமே ஸ்வாதினத்தை வாங்கமுடியும். நீதிமன்றத்துக்கு போகவேண்டும் என்றால் செலவு பிடிக்க கூடிய விஷயம் கால நேரம் விரயம் ஆகக்கூடிய ஒரு விஷயம் அதை கருத்தில் வைக்கவேண்டும். அதைப்போல் சிவில் விஷயங்களில் காவல் துறையினர் எக்காரணத்துக்கொண்டும் எப்போதும் தலையிடுவதற்கு உரிமை இல்லை. ஆக சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் நீதிமன்றத்தை நாடி நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்கிறதோ அதன் படிதான் நடந்துகொள்ளவேண்டுமே தவிர காவல் துறையினர் இதற்க்கு உத்தரவு போடுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

Pin It on Pinterest