வீட்டு வன்முறை சட்டத்தில் இருந்து பெண்களின் பாதுகாப்பு

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

பெண்கள் பாதிப்பிற்காக என்னென்ன மாதிரியான சட்டங்கள் உள்ளன என்று பார்க்கப்போகிறோம். இந்தியாவில் மட்டுமில்லை உலகமுழுக்க ஐ.ந.சபையால் இருக்கிற பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் நிறைய உள்ளது. பெண்கள் பாதிப்பிற்கு சர்வதேச சட்டம் இருக்கிற விஷயத்தை நாம் எல்லாரும் தெரிஞ்சிருக்கவேண்டும். இந்த சர்வதேச சட்டத்தை இந்திய அரசும் ஏற்றுள்ளது.

இந்த பெண்கள் பாதிப்பிற்கான சர்வதேச சட்டத்தை சிடா சட்டம் ஆங்கிலத்தில் Convention on elimination of all forms of discrimination against women (CEDAW) இதன் சுருக்கம் தான் சிடா சட்டம் என்று சொல்கிறோம். இந்த சர்வதேச சட்டத்தை இந்திய அரசும் ஏற்றுள்ளது இதுமட்டுமில்லை இந்தியாவில் Constitution of India என்று ஆங்கிலத்தில் சொல்கிற இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு நிறைய சட்டப் பிரிவுகள் இருக்கு. உதாரணமாக எந்தவகையிலும் ஆணுக்கு பெண் பாகுபாடு செய்யக்கூடாது எந்தவித பாகுபாட்டிற்கும் பெண்ணை உட்படுத்தக்கூடாது.

ஆணுக்கு பெண் சமம் என்கிற விசயத்தை இந்த அரசியல் நிர்ணயச் சட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லை இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பிருக்கென்று ஒவ்வொன்று சூழ்நிலைகளுக்கும் எந்தமாதிரியான சட்டங்கள் இருக்கென்று பார்ப்போம். முதலில் சொல்லவேண்டிய ஒரு விசயம் என்னவென்றால் திருமணமான பெண்கள் ஆகட்டும், அல்லது திருமண உறவு இல்லாட்டியும் ஒரு ஆணோடு சேர்ந்து வாழ்கிற ஒரு வீட்டில் சிலகாலமாவது சேர்ந்து வாழ்கிற ஒரு பெண்ணாகட்டும் அல்லது ஒரு சகோதரியோ அல்லது தாயோ இல்லை வேறு எந்த ஒரு பெண்ணோ வீட்டில் பிற நபர்களோடு சேர்ந்து வாழ்கிற ஒரு பெண் எப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்தமாதிரியான சட்டத்தில் பரிகாரத்தை கேட்கலாம் பிரச்னை எதுவானாலும் நீதிமன்றத்தை அணுகலாம் விரைவாக எப்படி பரிகாரம் கேட்கலாம் என்பதெல்லாம் சொல்கிற மிக சமீபத்தில் வந்த சட்டம் என்னவென்றால் குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம். முதலில் எல்லாம் நம் பக்கத்து வீட்டில் எதிர் வீட்டில் ஏதேனும் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கிவிட்டால் யாரும் அதில் ரொம்ப தலையிடமாட்டார்கள்.

குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம்

 

ஏனென்றால் அது அவங்களுடைய குடும்ப பிரச்னை நாம் எப்படி அதில் தலையிடுவது நாம் தலையிடமுடியாது அப்படியென்று ஒதுங்கிக்கொள்வார்கள். ஆனால் இந்த குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் என்ன சொல்லப்படுகின்றது என்றால் ஒரு குடும்பத்திற்குள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு பெண்ணும் தாயோ, மனைவியோ, சகோதரியோ, மகளோ எப்படிப்பட்ட உறவு இருந்தாலும் எந்த ஒரு ஆண் மகனும் அந்த பெண்ணை எந்த வித வன்முறைக்கும் அதாவது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, சொத்து சம்பந்தமாகவோ எந்த விதத்திலும் அந்த பெண்ணை வன்முறைக்கு ஆளாக்க கூடாது, சித்ரவதை செய்யக்கூடாது, துன்புறுத்த கூடாது அப்படியென்று சொல்கிறார்கள்.

சரி இந்த மாதிரி ஒரு பெண் ஒரு வீட்டில் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறாள் என்றால் அந்த பெண் ஒரு எளிமையான பெட்டிஷன் 20ரூ ஸ்டாம்ப் ஒட்டி அருகில் இருக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் அந்த நீதிமன்றம் இது சம்பந்தமா விசாரணை நடத்தும் யார் மேலில் புகார் கொடுத்தார்களோ அவர்கள் மீது உடனடி எடுக்கப்படும். அந்த நபர் அப்பெண்ணிடம் அந்த வீட்டில் தொடர்ந்து குற்றத்தை செய்துக் கொண்டிருந்தால் அந்த வீடு அவர்பெயரில் இருந்தல் கூட அந்த வீட்டிற்கு அவர் வரக்கூடாது என்று சொல்லி அப்பெண் அந்த வீட்டிலே தங்கலாம் .

ஆக இந்த குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டத்தில் இருக்கிற மிக பெரிய நன்மை என்னவென்றால் ஒரு இடைக்கால உத்தரவினை நாம் பெண்ணுக்கு வாங்கிதரமுடியும் நீதிமன்றத்துக்கு மூலமாக எந்த தவறு செய்த ஆணும் தன்னுடைய சொத்திலே கூட உள்ளவரமுடியாத அளவிற்கு கோர்ட் ஒரு ஸ்டே ஆர்டர் கொடுப்பதற்கு வாய்ப்புள்ளது. அதன்பின் முழுமையாக விசாரணை நடத்தி உண்மை என்னவென்று தெரிந்த பிறகு இறுதி உத்தரவை நீதிமன்றம் கொடுக்கும். இதற்கெல்லாம் தாமதம் ஆகாது இதை நாம் DV case Domestic Violence என்று சொல்வோம்

இந்த DV case மிக குறுகிய காலத்தில் ஒரு வாரத்திற்குள் விசாரணை நடத்தலாம் என்று இருக்கு, கிட்டத்தட்ட 2, 3 மாதத்திற்குள்ளேயே இறுதி உத்தரவு வரக்கூடிய வாய்ப்பு இருக்கு இடைக்கால உத்தரவு நம் பாதுகாப்பிற்கு 2, 3 நாட்களிலோ அல்லது உடனடியாக வாங்க வாய்ப்புகள் இருக்கு. இதுமட்டுமில்லை அந்த பெண் அந்த பெண்ணை சார்த்த உறவினர்கள் அல்லது அந்த வழக்கில் யார் சாட்சியாக வரக்கூடிய நபர்களும் எந்த வித துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=-TzqcuTyvzw

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

error: Content is protected !!

Pin It on Pinterest