வழக்கறிஞர்கள் இல்லாமலே வழக்கினை தாக்கல் செய்யமுடியுமா

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

வழக்கறிஞர்கள் இல்லாமலே ஒரு நபர் ஒரு வழக்கினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யமுடியுமா? அல்லது தன்மீது ஏதேனும் வழக்கு தாக்கலாயிருந்தால் அந்த வழக்கினை வழக்கறிஞர்கள் இல்லாமலே தானே அந்த வழக்கினை நடத்த முடியுமா சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று பார்க்கப்போகிறோம். இந்தியாவில் இருக்கிற சட்டங்களில் நிச்சயமாக வழக்கறிஞர்கள் நியமித்துத்தான் ஒரு வழக்கு நடத்த வேண்டும் என்று எந்த சட்டத்திலல் கட்டாய படுத்தவில்லை.

Consumer Rights Violations

இன்னும் ஒரு சில சட்டத்தில் வழக்கறிஞர்களே அவசியமில்லை யாருவேண்டுமென்றாலும் பொதுமக்கள் நேரடியாக நீதிமன்றத்தில் பெட்டிஷன் தாக்கல் செய்யலாம் அப்படியென்று உதாரணத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்ற சட்டத்தில் Consumer Rights Violations இது இருந்தாலும் நீதிமன்றத்துக்கு உரிய படிவத்தில் உரிய கட்டணங்களை செலுத்தி யார் பாதிக்க பட்டுருக்கிறார்களோ அவர்கள் நேரடியாக வழக்கை நடத்தமுடியும். இந்த மாதிரி கன்சுமர் கேஸ் மட்டுமில்லாமல் சொத்து சம்பத்தப்பட்ட சிவில் வழக்குகளில் கூட வழக்கறிஞர்கள் நிச்சயமாக நியமித்துதான் வழக்கை நடத்தவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. குற்றவியல் வழக்குகளில் கூட எந்த எதிரியும் Accused என்று சொல்லுகிற குற்றம்சாட்ட பெற்ற நபரும் வழக்கறிஞர்கள் வைத்து தான் வழக்கை நடத்தவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஏன் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நிறைய வழக்குகளில் ஆஜராகி அவர்களுடைய கட்சிக்காரருக்காக வாக்குவாதம் செய்து கேஸை நடத்தி எதுனால இந்த மாதிரிஎல்லாரும் வழக்கறிஞர்கள் வைத்துருக்கிறார்கள் என்று கேட்கலாம், வழக்கறிஞர்களுக்கு என்ன வழக்கு எந்த மாதிரியான சட்டத்தில் இருக்கு அந்த சட்டத்தில் என்னென்ன உரிமைகள் சம்பந்தப்பட்ட நபருக்கு இருக்கு என்ற விஷயங்கள் எல்லாம் தெளிவாக தெரியும். சட்ட நடைமுறைகள் மட்டுமில்லாமல் அதே மாதிரி வழக்கில் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ஆகியவை என்ன மாதிரியான தீர்ப்புகளை இதுக்கு முன்பு கொடுத்திருக்கு அந்த மாதிரி தீர்ப்புகளில் படித்துப்பார்த்து அதன் படி தன் முன்னாடி இருக்கிற அந்த கட்சி காரருக்கு அதேமாதிரியான வழக்குகளில் அந்தமாதிரியான உரிமைகளெல்லாம் அந்த நீதிமன்றம் கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கேட்கிறபோது ஆதாரத்தோடு கேட்கிறபோது நிச்சயமாக யார் வழக்கு நடத்துகிறார்களாளோ அவர்களுக்கு நிறைய பயன்கள் இருக்கு. வழக்கறிஞர்கள் வைத்து வழக்கு நடத்தாதவங்களுக்கு இந்தமாதிரியான அனுபவங்களோ, சட்டஅறிவோ, தீர்ப்புகள் கொடுத்த விஷயமோ தெரியாமல் போய்விடும் .அந்தமாதிரி தெரியாமல் போய்விட்டால் அது மூலமாக அவர்களுக்கு கிடைக்கின்ற பயன் நன்மை உரிமைகள் எல்லாம் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும் அதனால்தான் எல்லோரும் வழக்கறிஞர்களை நியமித்து வழக்கு நடத்துகிறார்கள்.

Legal Services Authority

எனக்கு வழக்கறிஞர்கள் நியமிக்க எனக்கு வசதி இல்லை என்று ஒருத்தர் சொல்லுகிறாரென்றால் நிச்சயமாக வழக்கறிஞர்கள் வேண்டும் என்று யாரேனும் நினைத்து அதற்கு வசதி இல்லை என்று ஒரு மனு மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் இருக்கின்ற சட்டப் பணிகள் ஆணை குழு என்கிற அலுவலகம் இருக்கு Legal Services Authority என்கிற அரசு அலுவலகம் சட்ட உதவி தேவைப்படுகிறவர்கள் எல்லாம் எந்த வித கட்டணம் இல்லாமல் இலவசமாக சட்ட சேவைகளிலெல்லாம் செய்துதருவதற்காக வழக்கறிஞர்கள் அங்கு திறம்பட செயலாற்றுகிறார்கள். எல்லாநாளும் அது செயல்படும் எல்லா அரசு வேலை நாட்களிலும் எந்த பிரச்னை இருந்தாலும் சட்ட ஆலோசனையோ வழக்கு நடத்துவதற்காகவோ சட்ட பணிகள் ஆணை குழு டிஸ்ட்ரிக்ட் கோர்ட்டுக்குள் இருக்கிற அலுவலகத்தில் போய் மனு கொடுத்து இதற்கான வழக்கறிஞர்கள் நியமித்து வழக்கு நடத்தவேண்டுமென்று கேட்டால் நிச்சயம் நிறைய உதவிகள் அதுமூலமாக கிடைக்கும் வழக்கறிஞர்களும் நமக்கு கிடைப்பார்கள் எந்த வித கட்டணங்கள் இல்லாமல் நாம் திறம்பட நம் வழக்கை நடத்தமுடியும்.

https://www.youtube.com/watch?v=wgChuSg-49E

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

error: Content is protected !!

Pin It on Pinterest