மனித உரிமைகள் என்றால் என்ன

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

சர்வதேச மனித உரிமைகள் தினம் என்கிற நாள் டிசம்பர் 10ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலகெங்கிலும் அனுசரிக்க படுகிற நாள். ஏன் இது அனுசரிக்க படுகிற நாள் என்றால் மனித உரிமைகள் தினம் கொண்டப்படுவதற்கு நேரம் இன்னும் வரவில்லை ஏன்? உலகமுழுக்க அனைத்து மனித உரிமைகளும், அனைத்து மக்களும், எல்லா நாட்டிலும், எல்லா சமயங்களிலும் தடையின்றி அனுபவிக்க படுகின்ற சூழ்நிலை இருக்கிற பொழுது தான் மனித உரிமை தினம் கொண்டாடப்படுவதற்கான

ஒரு விஷயமாக இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட நிலை இன்னும் வரவில்லை உலகெங்கிலும் ஏதோ ஒரு மூலையில் நிச்சயமாக மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. நிறைய பேர் மனித உரிமையின் மீறல்களாள் பாதிக்கப்பட்டு தான் ஒவ்வொரு நிமிடமும் உலகமுழுக்க இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனித உரிமை தினம் கொண்டாடபடுவதற்கான நேரமாக இல்லை.

அனுசரிக்கப்படுவதினுடைய நோக்கமென்ன ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10ஆம் தேதி அந்த நாட்டில் மனித உரிமை தினம் எப்படி இருக்கு இன்னும் எந்த மாதிரி சிறப்பாக மனித உரிமை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கலாம் மனித உரிமை மீறல்கள் நடந்திருந்தால் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மாதிரியான விரைவான நீதி கொடுக்க முடியும் அப்படியென்ற விஷயங்கள் பற்றி எல்லாம் பரிசீலனை செய்வதற்கான ஒரு நேரம் தான் ஒரு நாள் தான் மனித உரிமை தினம்.

Human Rights

இது ஏன் சர்வதேச அளவில் டிசம்பர் 10ஆம் தேதி தேர்ந்தெடுத்தார்கள் என்றால் உலகளாவிய மனித உரிமை பிரகடனம் Universal Declaration of Human Rights சுருக்கமாக UDHR என்று சொல்கிற சர்வதேச மனித உரிமை பிரகடனம் என்கிற சர்வதேச சட்டத்தை ஐக்கிய நாடு சபை டிசம்பர் 10ஆம் தேதி 1948 ஆம் வருடம் ஐநா சபையில் நிறைவேற்றினார்கள், அப்படியென்றால் உலகத்திலுள்ள ஐநா சபையில் இருக்கிற எல்லா நாடுகளும் இந்த சர்வதேச மனித உரிமை சட்டத்தில் சொல்லப்படுகிற 30 வகையான மனித உரிமைகளிலும் அவரவர் நாட்டு மக்களுக்கு நிச்சயம் நாங்கள் வழங்குவோம் எந்த சூழ்நிலைகளிலும்

இந்த 30 வகையான மனித உரிமைகளை நாங்கள் மீறமாட்டோம். அப்படி ஏதேனும் சூழ்நிலை மீறுவதற்காக அமைந்துவிட்டால் யார் மீறினார்களோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனைப் பெற்றுத்தருவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயமாக இழப்பீடு தருவோம். இது போன்ற மனித உரிமை மீறல்கள் நடக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று ஐநா சபையில் எல்லா நாட்டு மக்களும் மக்களின் பிரதிநிதிகளும் அந்த நாட்டு அரசாங்கம் மூலமாக சொல்லியிருக்கின்றன. இந்த உறுதிமொழி கொடுத்த நாள் தான் டிசம்பர் 10ஆம் நாள். அதனால்தான் டிசம்பர் 10ஆம் நாளை சர்வதேச மனித உரிமைகள் தினமாக உலகெங்கும் அனுசரிக்கிறோம்

https://www.youtube.com/watch?v=J0alOQPHFt4

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

error: Content is protected !!

Pin It on Pinterest