தகவல் பெரும் உரிமைச் சட்டம்

தகவல் பெரும் உரிமைச் சட்டம்

தகவல் பெரும் உரிமைச் சட்டம்

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

தகவல் பெரும் உரிமைச் சட்டம் என்பது என்னவென்றால் இது தமிழில் நிறையபேர் தவறாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று சொல்கிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டம் அல்ல இது தகவல் பெரும் உரிமைச் சட்டம். ஆங்கிலத்தில் Right to Information Act சுருக்கமாக RTI சட்டம் என்று சொல்கிறோம்.

இந்த சட்டத்தினால் பொது மக்களுக்கு என்ன பயன் என்று பார்ப்போம். தனிப்பட்ட முறையிலும் இல்ல பொதுவான விஷயங்களுக்காகவும் அரசு அதிகார இடத்தில் அரசு அலுவலகங்களில் தகவல்களைப் பெறுவதற்கான ஒரு சட்டம் இது, என்னென்ன தகவல் பெறலாம்? எந்த தகவலையும் அரசு அலுவலகங்களில் இருந்து பெறலாம். அரசு ஆவணங்கள் எல்லாம் ரகசியமானவை என்ற விஷயத்தை நீக்கி இந்த சட்டம் சொல்கிறார்கள். இந்த சட்டத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால் எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் எனக்கு குறிப்பிட்ட தகவல் வேண்டும் நான் ஒரு மனு கொடுத்தேன் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிச்சுருக்கலாம், இல்ல ஜாதி சான்றிதழ் கேட்டுருக்கலாம் வேறு எந்த விஷயமாவது இருக்கலாம் இதில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கிறார்கள் எடுக்கப்படவில்லை என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு என்று ஒரு வெள்ளைத் தநாளில் எழுதி ரூ10.

Registered Post with Acknowledgement Due

கொடுத்து நீதிமன்ற கட்டணம் ஸ்டாம்ப் ஒட்டி அந்த மனுவில் யாருக்கு கொடுக்கவேண்டும் என்றால் உதவி பொது தகவல் அதிகாரி அதாவது Assistant Public Information Officer (APIO) என்று எழுதி எந்த அரசு அலுவலகத்தில் கொடுக்கவேண்டுமோ இப்போ அந்த சான்றிதழில் எந்த வாட்டாச்சி அலுவலகம் என்றால் வாட்டாச்சி அலுவலகத்தில் அந்த முகவரி சேர்த்து நாம் பதிவு தபால் அஞ்சல் ஒப்புதல் அட்டையுடன் அதாவது RPAD (Registered Post with Acknowledgement Due) அந்த அட்டையோடு நாம் அனுப்பிவைத்தால், இந்தமாதிரி தகவல் எப்படிவேண்டும் எழுத்து மூலமாக எனக்கு கொடுங்க என்று கேட்கலாம் அல்லது அந்த கோப்புகளை (Government Files) நான் போய் பார்ப்பதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்கலாம். இந்தமாதிரியான தகவல் பெறுவதற்கான வழிவகைசெய்கிற ஒரு சட்டம். இதைபோல் மனு அனுப்பியுள்ளோம் தகவல் பிறகும் கொடுவில்லையென்றால் என்ன செய்வது,

இந்த சட்டத்தில் சர்வேச சட்டத்தின் கீழ் என சொல்லப்படுகிறது என்றால் எந்த மனுப் பெறப்பட்டாலும் அரசு அதிகாரிடம் இருந்து தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு வந்ததென்றால் 30 நாட்களில் தகவலை அந்த அரசு அதிகாரி யார் மனு கொடுத்தார்களோ அவருக்கு தரவேண்டும். அப்படி அந்த அதிகாரி கொடுக்கவில்லையென்றால் அவர் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு நாளைக்கு ரூ250 அபராதம் புடிப்பார்கள். அப்படி 30 நாட்களில் கொண்டுக்கவில்லையென்றால் அந்த அலுவலகத்திலேயே நீங்கள் Appellate Authority என்று சொல்கிற மேல்முறையீட்டு அதிகாரிக்கு இதை தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனுவை மேல் முறையீட்டு அதிகாரிக்கு (இதில் எந்த ஒரு முத்திரை (stamp) ஓட்ட தேவையில்லை) அனுப்புங்கள்.

State Information Commission

அப்படி அவர்களிடமிருந்தும் தகவல் வரவில்லையென்றால் நீங்கள் மாநில தகவல் ஆணையம் (State Information Commission) அப்படியென்று சென்னையில் உள்ளது அங்கு இரண்டாவது மேல் முறையீடு தாக்கல் செய்தால் அங்கு IAS அதிகாரிகள் இருப்பார்கள் உடனடியாக விசாரணை நடத்தி இந்த தகவல்களை ஏன் மறுத்தீர்கள் என்று அந்த அரசு அதிகாரியிடம் கேட்பார்கள் உரிய விளக்கம் கிடைக்கவில்லை என்றால் அந்த அதிகாரிக்கு அபராதம் மூலமாக தண்டனை கொடுப்பதற்கும் மனு கொடுத்தவருக்கு தகவல் கொடுப்பதற்கும் இந்த சட்டத்தில் வழி இருக்கு. இதுனால நாம் Apply Apply No Reply என்று அரசு அலுவலகத்தில் நாம் மனு கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் அவர்கள் செயல் படமாட்டார்கள் அப்படியென்ற எண்ணம் எல்லாம் வரவேண்டாம். நிச்சயமாக அரசு அதிகாரியிடமிருந்தது நாம் என்ன தகவல் வேண்டுமென்றாலும் கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=L6FC3N1BWa4

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

வீட்டு வன்முறை சட்டத்தில் இருந்து பெண்களின் பாதுகாப்பு

வீட்டு வன்முறை சட்டத்தில் இருந்து பெண்களின் பாதுகாப்பு

வீட்டு வன்முறை சட்டத்தில் இருந்து பெண்களின் பாதுகாப்பு

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

பெண்கள் பாதிப்பிற்காக என்னென்ன மாதிரியான சட்டங்கள் உள்ளன என்று பார்க்கப்போகிறோம். இந்தியாவில் மட்டுமில்லை உலகமுழுக்க ஐ.ந.சபையால் இருக்கிற பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் நிறைய உள்ளது. பெண்கள் பாதிப்பிற்கு சர்வதேச சட்டம் இருக்கிற விஷயத்தை நாம் எல்லாரும் தெரிஞ்சிருக்கவேண்டும். இந்த சர்வதேச சட்டத்தை இந்திய அரசும் ஏற்றுள்ளது.

இந்த பெண்கள் பாதிப்பிற்கான சர்வதேச சட்டத்தை சிடா சட்டம் ஆங்கிலத்தில் Convention on elimination of all forms of discrimination against women (CEDAW) இதன் சுருக்கம் தான் சிடா சட்டம் என்று சொல்கிறோம். இந்த சர்வதேச சட்டத்தை இந்திய அரசும் ஏற்றுள்ளது இதுமட்டுமில்லை இந்தியாவில் Constitution of India என்று ஆங்கிலத்தில் சொல்கிற இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு நிறைய சட்டப் பிரிவுகள் இருக்கு. உதாரணமாக எந்தவகையிலும் ஆணுக்கு பெண் பாகுபாடு செய்யக்கூடாது எந்தவித பாகுபாட்டிற்கும் பெண்ணை உட்படுத்தக்கூடாது.

ஆணுக்கு பெண் சமம் என்கிற விசயத்தை இந்த அரசியல் நிர்ணயச் சட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லை இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பிருக்கென்று ஒவ்வொன்று சூழ்நிலைகளுக்கும் எந்தமாதிரியான சட்டங்கள் இருக்கென்று பார்ப்போம். முதலில் சொல்லவேண்டிய ஒரு விசயம் என்னவென்றால் திருமணமான பெண்கள் ஆகட்டும், அல்லது திருமண உறவு இல்லாட்டியும் ஒரு ஆணோடு சேர்ந்து வாழ்கிற ஒரு வீட்டில் சிலகாலமாவது சேர்ந்து வாழ்கிற ஒரு பெண்ணாகட்டும் அல்லது ஒரு சகோதரியோ அல்லது தாயோ இல்லை வேறு எந்த ஒரு பெண்ணோ வீட்டில் பிற நபர்களோடு சேர்ந்து வாழ்கிற ஒரு பெண் எப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்தமாதிரியான சட்டத்தில் பரிகாரத்தை கேட்கலாம் பிரச்னை எதுவானாலும் நீதிமன்றத்தை அணுகலாம் விரைவாக எப்படி பரிகாரம் கேட்கலாம் என்பதெல்லாம் சொல்கிற மிக சமீபத்தில் வந்த சட்டம் என்னவென்றால் குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம். முதலில் எல்லாம் நம் பக்கத்து வீட்டில் எதிர் வீட்டில் ஏதேனும் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கிவிட்டால் யாரும் அதில் ரொம்ப தலையிடமாட்டார்கள்.

குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம்

 

ஏனென்றால் அது அவங்களுடைய குடும்ப பிரச்னை நாம் எப்படி அதில் தலையிடுவது நாம் தலையிடமுடியாது அப்படியென்று ஒதுங்கிக்கொள்வார்கள். ஆனால் இந்த குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் என்ன சொல்லப்படுகின்றது என்றால் ஒரு குடும்பத்திற்குள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு பெண்ணும் தாயோ, மனைவியோ, சகோதரியோ, மகளோ எப்படிப்பட்ட உறவு இருந்தாலும் எந்த ஒரு ஆண் மகனும் அந்த பெண்ணை எந்த வித வன்முறைக்கும் அதாவது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, சொத்து சம்பந்தமாகவோ எந்த விதத்திலும் அந்த பெண்ணை வன்முறைக்கு ஆளாக்க கூடாது, சித்ரவதை செய்யக்கூடாது, துன்புறுத்த கூடாது அப்படியென்று சொல்கிறார்கள்.

சரி இந்த மாதிரி ஒரு பெண் ஒரு வீட்டில் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறாள் என்றால் அந்த பெண் ஒரு எளிமையான பெட்டிஷன் 20ரூ ஸ்டாம்ப் ஒட்டி அருகில் இருக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் அந்த நீதிமன்றம் இது சம்பந்தமா விசாரணை நடத்தும் யார் மேலில் புகார் கொடுத்தார்களோ அவர்கள் மீது உடனடி எடுக்கப்படும். அந்த நபர் அப்பெண்ணிடம் அந்த வீட்டில் தொடர்ந்து குற்றத்தை செய்துக் கொண்டிருந்தால் அந்த வீடு அவர்பெயரில் இருந்தல் கூட அந்த வீட்டிற்கு அவர் வரக்கூடாது என்று சொல்லி அப்பெண் அந்த வீட்டிலே தங்கலாம் .

ஆக இந்த குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டத்தில் இருக்கிற மிக பெரிய நன்மை என்னவென்றால் ஒரு இடைக்கால உத்தரவினை நாம் பெண்ணுக்கு வாங்கிதரமுடியும் நீதிமன்றத்துக்கு மூலமாக எந்த தவறு செய்த ஆணும் தன்னுடைய சொத்திலே கூட உள்ளவரமுடியாத அளவிற்கு கோர்ட் ஒரு ஸ்டே ஆர்டர் கொடுப்பதற்கு வாய்ப்புள்ளது. அதன்பின் முழுமையாக விசாரணை நடத்தி உண்மை என்னவென்று தெரிந்த பிறகு இறுதி உத்தரவை நீதிமன்றம் கொடுக்கும். இதற்கெல்லாம் தாமதம் ஆகாது இதை நாம் DV case Domestic Violence என்று சொல்வோம்

இந்த DV case மிக குறுகிய காலத்தில் ஒரு வாரத்திற்குள் விசாரணை நடத்தலாம் என்று இருக்கு, கிட்டத்தட்ட 2, 3 மாதத்திற்குள்ளேயே இறுதி உத்தரவு வரக்கூடிய வாய்ப்பு இருக்கு இடைக்கால உத்தரவு நம் பாதுகாப்பிற்கு 2, 3 நாட்களிலோ அல்லது உடனடியாக வாங்க வாய்ப்புகள் இருக்கு. இதுமட்டுமில்லை அந்த பெண் அந்த பெண்ணை சார்த்த உறவினர்கள் அல்லது அந்த வழக்கில் யார் சாட்சியாக வரக்கூடிய நபர்களும் எந்த வித துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=-TzqcuTyvzw

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

காவல் நிலையமோ நீதிமன்றமோ செல்ல தயக்கம் வேண்டாம்

காவல் நிலையமோ நீதிமன்றமோ செல்ல தயக்கம் வேண்டாம்

காவல் நிலையமோ நீதிமன்றமோ செல்ல தயக்கம் வேண்டாம்

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

கோர்ட்டுக்கு போலீஸ்டேஷனுக்கு போகிறதெல்லாம் தவறானகாரியமா, நிறைய பேர் எங்களை கோர்ட் படி ஏற வெச்சுட்டாங்க எங்களை போலீஸ் ஸ்டேஷன் வர வெச்சுட்டாங்க அப்படியென்று கோர்ட்டுக்கு போலீஸ்டேஷன்க்கு போவது தவறான செயல் மாதிரியும் அது போக கூடாத இடங்கள் மாதிரியும் சித்தரிக்குரதை நாம் கேள்விப்பட்டிருப்போம் காவல் நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் எதற்காக இருக்கு உண்மையிலேயே நமக்கு சட்டத்தில் சில முக்கியமான அடிப்படையான உரிமைகள் கொடுக்கப்பட்டிருக்கு. அந்த உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகிறபோது அந்த உரிமைகள் மீறப்படுகிறபோது யாரேனும் நமக்கெதிரா ஏதேனும் தீங்களித்தால் நமது பொருட்களை களவாடிவிட்டால் நாம் காவல் நிலையத்திற்கு போய்  தான் புகார் கொடுக்கவேண்டும் அதுதான் சட்டம் சொல்கிறது.

அதேமாதிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் அந்த காவல் நிலையத்தில் மேல் நீதி மன்றத்தில் புகார் கொடுக்க வேண்டுமென்று சட்டம் சொல்கிறது. ஆக நீதிமன்றத்தில் புகார் கொடுப்பதோ  இல்லை காவல் நிலையத்திற்கு சென்று கொடுப்பதோ எந்த விதத்திலும் தவறான காரியமாக இருக்கமுடியாது. இன்னொரு விஷயம் சாதாரணமா பல பேர் சொல்றதை கேள்விப்பட்டிருப்போம் எங்களை கோர்ட்டில்  கூண்டேர வைத்துவிட்டார்கள் அப்படியென்று, அது நீதிமன்ற நடைமுறை பற்றி சரியாக புரிதல் இல்லாததினால் சொல்கிற வாசகம்.

குற்றம் சாட்டப் பெற்றவர் நிறுத்தப் படுகின்ற கூண்டு

நீதி மன்றத்தில் இரண்டு கூண்டுகள் இருக்கிறது ஒன்று சாட்சி கூண்டு மற்றொன்று குற்றவாளி கூண்டு (குற்றம் சாட்டப் பெற்றவர் நிறுத்தப் படுகின்ற கூண்டு) குற்றம் சாட்டப் பெற்றவர் விசாரணையின் போது நிறுத்தவைக்கப் படுகின்ற கூண்டு தனியாக இருக்கும், நீதிபதிக்கு எதிராக அமைக்கப்பட்டிருக்கும், சாட்சி கூண்டு என்று சொல்லப்படுவது நீதிபதி  இருக்கைக்கு அருகாமையில் இருக்கும். ஆக நீதிமன்றத்துக்கு சென்று நமது பிரச்சனைக்காக புகாரை கொடுத்து அதற்காக நாம் சாட்சி சொல்வதோ அல்லது பிற வழக்குகளில் நாம் உண்மை என்ன என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்வதற்காக சாட்சியம் அழிப்பதோ நிச்சயம் ஒரு குடிமகனுடைய அடிப்படை கடமையாகும்.

அதற்காக நீதிமன்றத்தில் கூண்டெற வைத்துவிட்டார்கள் என்று தவறாக கருத வேண்டாம். சாட்சி கூண்டெறி சாட்சி சொல்வது தனது வழக்கிற்காகவோ பிற வழக்கிற்காகவோ ஒருவருடைய கடமை என்பதினால் அது தவறேயில்லை. அதேமாதிரி  காவல்நிலையத்திற்கு புகார் கொடுப்பதற்காக செல்வதும் எந்த விதத்திலும் தவறில்லை. ஆகையினால் எங்களை கோர்ட் படி ஏற வெச்சுட்டாங்க எங்களை போலீஸ் ஸ்டேஷன் வர  வெச்சுட்டாங்க என்று யாரும் கவலைப்  பட அவசியம் இல்லை.

அது நமது உரிமையே நிலைநாட்டுவதற்காக என்ற வகையில் இருந்தால் காவல் நிலையத்திற்கு செல்வதாலோ அல்லது நீதி மன்றத்துக்கு செல்வதாலோ அது நிச்சயம் தவறான ஒரு விஷயம் இல்லை அது நமது அடிப்படை உரிமையும் கூட அடிப்படை கடைமையும் கூட.

https://www.youtube.com/watch?v=dRyABS0OsbY

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

காசோலை குறித்த புதிய சட்டம்

காசோலை குறித்த புதிய சட்டம்

காசோலை குறித்த புதிய சட்டம்

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

மாற்றாவனமுறைச்  சட்டம் என்று சொல்ல படுகிற negotiable instrument act என்று ஆங்கிலத்தில் சொல்கிற சட்டத்தில் என புதியதாக வந்திருக்கிறது என்று பார்க்கப்போகிறோம். சாதாரணமாக cheque என்று சொல்கிற காசோலையை தான் தரவேண்டிய ஒரு தொகைக்காக ஒரு நபர் இன்னொரு நபருக்கு அதாவது யாரிடமிருந்து கடன் பெற்றாரோ அந்த நபருக்கு அந்த காசோலை கொடுத்துவிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த பணத்தை தரவில்லை என்றால் அந்த காசோலை அவரது வங்கியில் டெபாசிட் செய்யும் பொழுது போதிய பணம் இல்லை என்றோ, இல்லை வேறு சில காரணங்களுக்காகவோ அந்த காசோலை வங்கியில் காலெக்ஷன் ஆகாமல் திரும்ப வந்துவிட்டால்  நிச்சயமாக அது இரண்டு வருடம் வரை சிறை தண்டனை அளிக்கக்கூடிய ஒரு குற்றமாக கருதப்படும். அதுமட்டுமில்லாமல் அந்த காசோலையில் என்ன தொகை எழுதப்பட்டிருக்கோ அந்த தொகையில் இரண்டு மடங்கு தொகை அபராதமாக அல்லது இழப்பீடாக நீதிமன்றம் விதிப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது.

புதிதாக சட்டத்திருத்தம்

இந்த சட்டத்தில் புதிதாக 2018 ஆம் வருடம் என்ன புதிதாக சட்டத்திருத்தம் வந்திருக்கு என்றால், இந்த மாதிரி வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது யார் அந்த காசோலையை வைத்திருக்கிறார்களோ எனக்கு சேர வேண்டிய தொகைக்காக  இந்த காசோலையை கொடுத்தார்கள்

 

ஆனால் எதிரி அந்த பணத்தை கொடுக்காததால்  காசோலை திரும்ப வந்துவிட்டது என்று நீதிமன்றத்தில் எதிரி மீது வழக்கு தாக்கல் செய்யும் போது இந்த வழக்கு முடிவதற்கு முன்பே இந்த புதிய சட்டத்தின் படி 20%  காசோலை தொகையினை, உதாரணத்துக்கு காசோலை தொகை ரூ1 லட்சமாக இருக்கிற போது  ரூ20 ஆயிரத்தை நீங்கள் வழக்கு நடத்துவதற்கு முன்பே எனக்கு இடைக்கால இழப்பீடாக எதிரி தருவதற்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த வழக்கு தாக்கல் செய்த புகார்தாரர் (complainant) ஒரு பெட்டிஷன் கோர்ட்டில் பைல் பண்ணுகிற போது நீதிமன்றம் அந்த காசோலை தொகையினில் 20% இடைக்கால இழப்பீடாக எதிரி புகார்தாரற்கு  கொடுக்கவேண்டுமென்று உத்தரவிட இந்த புதிய சட்டத்தில் இடமிருக்கு.

ஆனால் வழக்கு முடியும் போது புகார் தள்ளுபடி செய்யப்பட்டால் அதாவது எதிரி விடுதலை செய்யப்பட்டால் அந்த தொகையை எப்போது புகார்தாரற்கு கொடுத்தாரோ அந்த தேதியில் இருந்து வங்கியினுடைய வட்டியின் அடிப்படையில் கணக்கீட்டு அந்த தொகைக்கு வட்டியும்  முதலுமாக  சேர்த்து அந்த புகார்தாரர் எதிரிக்கு திருப்பி செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுவதற்கும் இந்த புதிய சட்டத்தில் இடம் இருக்கு.

அதுமட்டுமில்லாமல் மேல்முறையீடு நடக்கிறபொழுது எந்த மாதிரி உத்தரவு வந்தாலும் யார் மேல்முறையீடு செய்திருந்தாலும் மேல்முறையீடு நிலுவையில் இருக்கிறபோது அது முடிவதற்கு முன்பே 20% காசோலைத் தொகையினை எதிரி இடைக்கால இழப்பீடாக கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வதற்கு புகார்தாரற்கு உரிமை இருக்கு. காசோலையை ஒருவருக்கு கொடுப்பதற்கு முன்பு வங்கியில் போதிய பணம் இருக்கிறதா, தான் தரவேண்டியத் தொகைக்குத் தான் காசோலையை தருகிறோமா என்று எல்லா விஷயத்தையும் யோசித்து மிகவும் கவுனமாக கையாளவேண்டிய ஒரு ஆவணம் cheque என்று சொல்கிற காசோலை.

https://www.youtube.com/watch?v=LkkmPu1gPEk

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

உயில் சாசனம் மூலம் சொத்து பெறுவது எப்படி

உயில் சாசனம் மூலம் சொத்து பெறுவது எப்படி

உயில் சாசனம் மூலம் சொத்து பெறுவது எப்படி

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

உயில் ஒருத்தர் பெயரில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் அந்த சொத்து முழுமையாக வந்துவிடுமா, அந்த உயிலை பதிவு செய்து இருக்கவேண்டுமா, என்ற விஷயங்கள் பற்றி பார்க்கப்போகிறோம்.  உயில் என்று தமிழில் சொல்கிற விஷயம் ஆங்கிலத்தில் Deed of Will என்று சொல்கிறோம். அந்த பத்திரத்தை ஏன் will என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் என்றால், ஒரு அசையும் சொத்தோ அசையா   சொத்தோ அதாவது வீடு, நிலம், கட்டடம் இவைகள்   அசையா  சொத்து பணம், வங்கி இருப்பு, நகை, நிறுவனம் பங்குகள் இவை அசையும் சொத்து ஆகும்.

இந்த சொத்துக்களை  யார் வைத்திருக்குறார்களோ அவர் தான் காலத்திற்கு பிறகு அந்த சொத்துக்கள் யார்யாருக்கு போய் சேரவேண்டும் எப்படி அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்கிற விஷயத்தை எல்லாம் தன் காலத்திற்கு பிறகு எப்படி நடக்கவேண்டும் என்பதை எழுதி வைக்குற அந்த பத்திரத்திற்கு பெயர் தான் உயில் பத்திரம் என்று சொல்கிறோம்.

உயில் பத்திரம்

இந்த உயில் பத்திரம் ஒரு அப்பா தன காலத்திற்கு பிறகு வீடு தன் மகளுக்கும், வங்கி இருப்பு தன் மகனுக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார். அவர் இறந்த பிறகு அவர் மகன் வீட்டில் பங்கு கேட்டு பிரச்னை செய்யும்போது உயில் நகல் இருந்தால் அவர்  மகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அந்த சொத்து உயில் படி அப்பா எனக்கு தான் எழுதி வைத்திருக்கிறார் எனக்கு தான் முழுமையாக பாத்தியபடுது.

அப்படியென்று தீர்ப்பு கேட்க நிச்சயமாக வாய்ப்புள்ளது. அதேமாதிரி உயில் பத்திரம் மட்டுமே என்ன ஒரு சிறப்பம்சம் என்றால் அது பதிவு செய்யவேண்டுமென்று அவசியம் இல்லை. எந்த ஒரு நபரும் சாதாரணமாக வெள்ளைத்தாளில் அதை எழுதி இரண்டு நபர்கள் முன்னிலையில் சாட்சியாக வைத்து சாட்சியிடம் கையெழுத்து வாங்கி வைத்திருந்தால் அதுவே போதும்.

கடைசியாக எழுதிய உயில் மட்டுமே சட்டப்படி செல்லும்

அதே போல் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் உயில் பொறுத்தவரைக்கும் ஒரு நபர் அந்த உயிலை பதிவு செய்திருந்தால் கூட உயிலை பதிவு செய்யவேண்டுமென்று கட்டாயம் இல்லைனாலும் ஒரு நபர் நான் எழுதிய உயிலை பதிவுப்பணிக்கலாம் என்று முடிவெடுத்து பதிவுசெய்திருந்தால் கூட அதன் பிறகு மனது மாறி சில காலம் கழித்து அதை ரத்து செய்து கையில் எழுதி எடுத்து வைத்திருந்தால் கூட கடைசியா என்ன எழுதியுள்ளாரோ அதுதான் செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கும் அதுதான் சட்டம். கடைசியாக ஒரு நபர் என்ன பத்திரம் எழுதி வைத்திருக்கிறாரோ அந்த உயில் பத்திரம் தான் செல்லும்.

அதில் என்ன யாருக்கு சொத்து போகுமென்று சொல்லிருக்கோ அவர்களுக்கு தான் அந்த சொத்து போகும் என்று நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கும். முதலில் எழுதி வைத்த உயில் பத்திரம் பதிவு செய்திருக்கு அதுதான் செல்லும் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். கடைசியாக எழுதி வைத்த உயில் பத்திரம் இறந்தவர் எண்ணப்படி அவருடைய உண்மையான கையெப்பம் அல்லது கைரேகை மூலமாக அது நிருபணம் செய்யப்பட்டால் நிச்சயமாக கடைசியாக எழுதிய உயில் மட்டுமே சட்டப்படி செல்லும். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் உயிலில் இருக்கிற சொத்துக்கள் குறித்து குடும்பத்தில் சொத்தை யார் அனுபவிக்கவேண்டுமென்ற பிரச்னை வந்தால் யார் சொத்தில் ஸ்வாதனத்தில்(possession) இருக்கிறார்கள், அந்த சொத்து கட்டிடமாக இருக்கும்பொழுது யாருடைய ஸ்வாதினத்தில் சொத்து இருக்கு என்பது மிக மிக முக்கியமான விஷயம்.

உயில் படி

இப்போ ஒரு மகனுக்கு அந்த உயில் படி சொத்து சேரவேண்டும் என்று எழுதிவைக்கப் பட்டிருந்தால், மகள் அந்த சொத்தில் குடியிருந்தால் இல்லை அவங்க கண்ட்ரோலில் யாரையாவது வாடகைக்கு வைத்திருந்தால், அந்த சொத்தினுடைய ஸ்வாதினத்தை யார் உரிமைக் கூறுகிறார்களோ அவர்கள் வாங்கவேண்டுமென்றால் உயிலை மட்டுமே காண்பித்து நிச்சயமாக வாங்கமுடியாது. அதனால நேரடியாக நீதிமன்றத்துக்கு போய் அந்த உயிலில் படி இருக்கிற உரிமையே நிலைநாட்டிய பின் மட்டுமே ஸ்வாதினத்தை வாங்கமுடியும்.

நீதிமன்றத்துக்கு போகவேண்டும் என்றால் செலவு பிடிக்க கூடிய விஷயம் கால நேரம் விரயம் ஆகக்கூடிய ஒரு விஷயம் அதை கருத்தில் வைக்கவேண்டும். அதைப்போல் சிவில் விஷயங்களில் காவல் துறையினர் எக்காரணத்துக்கொண்டும் எப்போதும் தலையிடுவதற்கு உரிமை இல்லை. ஆக சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் நீதிமன்றத்தை நாடி நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்கிறதோ அதன் படிதான் நடந்துகொள்ளவேண்டுமே தவிர காவல் துறையினர் இதற்க்கு உத்தரவு போடுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

https://www.youtube.com/watch?v=FBY7physzrg

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

error: Content is protected !!

Pin It on Pinterest